உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊருக்கு கிளம்பியாச்சா.. படிச்சுட்டு போங்க!

ஊருக்கு கிளம்பியாச்சா.. படிச்சுட்டு போங்க!

கிழக்கே சூலம், மேற்கே சூலம் என்றெல்லாம் சொல்லி, குறிப்பிட்ட சில நாட்களில் பயணம் செய்யக்கூடாது என பெரியவர்கள் சொல்வார்கள். அது ஒருபுறம் இருக்கட்டும். பயணம் செய்ய எந்த நாட்கள் ஏற்றது என்று சொல்லப்பட்டிருக்கிறதா என்றால்... இருக்கிறது என்கிறது ஜோதிட சாஸ்திரம். திங்கள், சனிக்கிழமை கிழக்கே சூலம், ஞாயிறு, வெள்ளி மேற்கே சூலம், செவ்வாய், புதன் வடக்கே சூலம், வியாழன் தெற்கே சூலம். இந்த நாட்களில் இந்த திசைகளில்  பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.  அத்தியாவசியமாக இந்த திசைகளில் பயணம் செய்ய வேண்டும் என்றால், கிழக்கு திசைக்கு தயிர், மேற்கிற்கு வெல்லம், வடக்கிற்கு பசும்பால், தெற்கிற்கு நல்லெண்ணெய் சேர்த்த ஏதேனும் ஒரு உணவு சாப்பிட்டு விட்டு கிளம்பலாம் என்ற விதிவிலக்கு இருக்கிறது. அதேபோல செவ்வாயன்று கிழக்கே பயணம் செய்தால், உங்களுக்கு கிடைக்க வேண்டிய பொருள் கிடைத்து விடும். புதன், வியாழனில் மேற்கே பயணம் செய்தால் நீங்கள் நினைத்துப் போகும் செயலில் வெற்றி கிடைக்கும். ஞாயிறு, வெள்ளியில் வடக்கே  பயணம் செய்தால் தானிய லாபம் கிடைக்கும். திங்கள், சனியில் தெற்கே பயணம் செய்தால் பணவரவு உண்டு.  நல்லநாள் பார்த்து உங்கள் பயணத்திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்களேன்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !