உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயில் மார்கழி திருவிழா தொடக்கம்!

சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயில் மார்கழி திருவிழா தொடக்கம்!

நாகர்கோவில்: சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் மார்கழி திருவிழா நேற்று காலை, கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 18-ம் தேதி வரை பத்து நாட்கள் நடக்கிறது. வட்டபள்ளி மடம் ஸ்தானிகர் சர்மா கொடியேற்றினார். பத்து நாட்கள் நடக்கும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மக்கள்மார் சந்திப்பு மூன்றாம் நாள் திருவிழாவான 11-ம் தேதி நடக்கிறது. கோட்டாறு வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி, வேளிமலை குமாரசாமி ஆகியோர் தங்களது தாய், தந்தையரான சுவாமி, அம்பாளை சந்தித்து தரிசனம் செய்யும் மக்கள்மார் சந்திப்பு நிகழ்சியை கான பல்லாயிரகணக்கான பக்தர்கள் கூடுகின்றனர். 9-ம் நாள் (17-ம் தேதி)தேரோட்டம் நடக்கிறது. அன்று இரவு 12 மணிக்கு மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சிக்காக வந்த கோட்டாறு வலம்புரிவிநாயகர், மருங்கூர் சுப்பிரமணியசுவாமி, வேளிமலை குமாரசாமி ஆகியோர் தங்களது தாய், தந்தையான சுவாமியையும், அம்பாளையும் பிரிந்து செல்லும் சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !