நாகாத்தமன் கோவிலில் குருபூஜை விழா
ADDED :4427 days ago
புதுச்சேரி: கொட்டுப்பாளையம் நாகாத்தமன் கோவிலில், 8ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது.புதுச்சேரி இ.சி.ஆர். ரோடு கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவிலில் உள்ள ஐயப்ப சுவாமிக்கு 8ம் ஆண்டு குரு பூஜை நேற்றுமுன்தினம் மாலை நடந்தது. இதையொட்டி மாலை 5.00 மணியளவில் ஐயப்ப சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 6.00 மணிமுதல் இரவு 9.00 மணி வரை கூட்டு பஜனை நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.