புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4363 days ago
கிருமாம்பாக்கம்: தானம்பாளையம் புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.தவளக்குப்பம் தானம்பாளையத்தில் பாலவிநாயகர், பாலமுருகன், புத்துமாரியம்மன் கோவில் திருப்பணிகள் முடிந்து, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதையொட்டி, கடந்த 8ம் தேதி பூஜைகள் துவங்கியது. நேற்று காலை 4.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடந்தது.7.10 மணிக்கு விமான கும்பாபிஷேகம், 7.20 மணிக்கு பாலவிநாயகர், பாலமுருகன், புத்துமாரியம் மன் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகமும் நடந்தது.மாலை 5.00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையுடன், சுவாமி வீதியுலா நடந்தது. இன்று (10ம் தேதி) காலை 10.30 மணிக்கு 108 பால்குட அபிஷேகம் நடக்கிறது.ஏற்பாடுகளை தானம்பாளையம் கிராமவாசிகள் செய்திருந்தனர்.