காட்டுவனஞ்சூரில் திவ்ய நாம பஜனை
ADDED :4431 days ago
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூரில் திவ்ய நாம பஜனை நடந்தது. சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூர் கிராமத்தில் ராமர் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமி கோவில் கட்டப்பட்டு நேற்று முன் தினம் கும்பாபிஷேக விழா நடந்தது. நேற்று முன் தினம் இரவு வெங்கடேச பாகவதர் தலைமையில் கணேஷ் பாகவதர், குப்புராஜ் பாகவத கோஷ்டினரால் திவ்ய நாம பஜனை நடந்தது. சங்கர வெங்கட்ராமய்யர், நடராஜய்யர், சீனுவாசய்யர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.