சக்திமாரியம்மன் கோவிலில்நாளை முப்பெரும் விழா!
ADDED :4352 days ago
வால்பாறை: வால்பாறை அடுத்துள்ளது சின்கோனா (டேன்டீ) 6 வது டிவிஷன் ஸ்ரீசக்திமாரியம்மன், கன்னிமார் கோவிலின் 50 ம் ஆண்டு பூஜை, அர்த்த மண்டபம் திறப்பு விழா, கல்வெட்டு திறப்பு விழா என முப்பெரும் விழா நாளை(13ம்தேதி) நடக்கிறது.விழாவையொட்டி நாளை காலை 7.30 மணிக்கு புண்யாக வாசனம், வினாயகர் பூஜை நடக்கிறது.வரும் 14ம் தேதி காலை 5.00 மணிக்கு கணபதி ஹோமமும், நவக்கிரஹஹோமம், சுதர்ஷன ஹோமம், தன்வந்தரி ஹோமம் நடக்கிறது. காலை 8.00 மணிக்கு அம்மன், கணபதி, முருகன், கன்னிமார் சுவாமிகளுக்கு கவசநீர் அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடக்கிறது. வரும் 15ம் தேதி காலை 7.00 மணிக்கு மகாஅபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.