உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்பரதேசி கோவிலில் கும்பாபிஷேக விழா

கல்பரதேசி கோவிலில் கும்பாபிஷேக விழா

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே கல்பரதேசி கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பெரியசெவலையில் கல்பரதேசி கோவில் உள்ளது. இக்கோவிலை நிர்வகித்து வந்த முருகேச சுவாமிகள் மற்றும் அவரது சீடர் முத்துக்குமாரசாமி சில மாதங்களுக்கு முன்பு முக்தியடைந்தனர். இருவரின் உடல்கள் கோவில் வளாகத்தில் புதைத்து திருப்பணிகள் துவங்கின. திருப்பணிகள் முடிந்த நிலையில் இருவரது கோவில்களிலும் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 12ம் தேதி காலை விக்னேஸ்வரபூஜையுடன் விழா துவங்கி யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 7:30 மணிக்கு அஷ்ட திரவியாஹூர்தியும், சபர்சாஹூதியும் நடந்தது. காலை 10:00 மணிக்கு கடங்கள் புறப்பாடாகி 10:15 மணிக்கு முருகேசசுவாமி, முத்துக்குமாரசாமி கோவில்களில், யோகிராம்சுரேஷ் நரேந்தர் சுவாமி தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. சர்வசாதகத்தை சுவாமி நாதன் செய்திருந்தார். ஏற்பாடுகளை கல்பரதேசி கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !