சுசீந்திரம் கோயில் மார்கழி திருவிழா!
ADDED :4329 days ago
சுசீந்திரம்: தாணுமாலைய சுவாமி கோயில் மார்கழி விழாவை முன்னிட்டு நேற்று கருட தரிசனம் நடைபெற்றது. சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் மார்கழி பெருந்திருவிழா டிச. 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலாவுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.