உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தோடர் கோவிலில் கூரை மாற்றும் நிகழ்ச்சி!

தோடர் கோவிலில் கூரை மாற்றும் நிகழ்ச்சி!

ஊட்டி: அட்டக்கோடு மந்துவில், தோடரின கோவிலில் கூரை மாற்றும் நிகழ்ச்சி  நடந்தது. ஊட்டி அருகேயுள்ள அட்டக்கோடு மந்துவில், தோடரின மக்களின் கோவில் உள்ளது. இந்த கோவில் கூரை, வனங்களில் இயற்கையாக கிடைக்கும், பிரம்பு, மூங்கில், அவுல் எனப்படும் ஒரு வகை புல்லை கொண்டு வேயப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவிலின் கூரையை மாற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அங்குள்ள மக்கள் தங்களின் பாரம்பரிய உடையணிந்து, வனங்களில் இருந்து சேகரித்து கொண்டு வரப்பட்ட பொருட்களை கொண்டு, கோவிலை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டனர்.  இதேப்போல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், ஒவ்வொரு காலகட்டத்திலும், தோடர் இன மக்களின் கோவில்களை புனரமைக்கும் பணிகள் சுழற்சி முறையில் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !