பழனி தைப்பூசத் திருவிழா ஜன. 11ம் தேதி தொடக்கம்!
ADDED :4356 days ago
பழனி: பழனியில் தைப்பூசத் திருவிழா வரும் ஜன. 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தைப்பூசத் தேரோட்டம் வரும் ஜன. 17ஆம் தேதியும், தெப்பத் தேரோட்டம் ஜன. 20ஆம் தேதியும் நடைபெறுகிறது. விழாவின் போது தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பால்காவடி, பன்னீர்காவடி, மயில் பீலிக்காவடி, மலர்க்காவடி என பல்வேறு காவடிகளுடன் பாதயாத்திரையாக வருவார்கள்.