பவானியில் ராதா கல்யாண மஹோத்ஸவம்!
ADDED :4356 days ago
பவானியில் ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவ வழிபாடு திரளான பக்தர்கள் சூழ ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பவானி, கவுந்தப்பாடி ரோடு, பெரியார் நகர், ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பீடத்தில் ஞாயிற்றுக்கிழமை காலைமுதல் திருக்கல்யாண உற்வச வழிபாடுகள் நடைபெற்று வந்தன. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ மணவாள மாமுனி மடம் 23-ஆம் பட்டம் மடாதிபதி ஸ்ரீமத் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது.