சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று தேரோட்டம்
ADDED :4356 days ago
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில், மார்கழி, "ஆருத்ரா மகா தரிசனத்தையொட்டி, இன்று தேரோட்டம், நாளை, நடராஜர் மகா தரிசனம் நடக்கிறது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில், சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் சுவாமியின், மார்கழி ஆருத்ரா மகா தரிசன உற்சவம், 9ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய விழாவான தேரோட்டம், இன்றும், ஆருத்ரா தரிசனம் நாளையும் நடக்கிறது. இன்று காலை, 7:00 மணிக்கு, நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் சுவாமிகள், ஐந்து தேர்களில், நான்கு வீதிகளிலும் வலம் வருகின்றனர். நாளை, ஆருத்ரா தரிசனத்தையொட்டி, மதியம், 2:00 மணிக்கு, ஆனந்த நடராஜர் ஆருத்ரா மகா தரிசனம் நடக்கிறது.