ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் நாளை காப்புக்கட்டு
ADDED :4356 days ago
கீழக்கரை: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில், மண்டல பூஜையை முன்னிட்டு நாளை( டிச.,18) காப்புக் கட்டுவிழா நடைபெறுகிறது.கோயில் தலைமை குருக்கள் மோகன் கூறியதாவது: இக்கோயிலில் டிச., 27 காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடத்தப்படும். 8 மணிக்கு பேட்டை துள்ளல், 9 மணிக்கு பஸ்மகுளத்தில் ஆராட்டு விழா, 10 மணிக்கு மகா அபிஷேகம், ஆராதனை, பஜனை, அன்னதானம் நடைபெறுகிறது. மதியம் 4 மணிக்கு முக்கிய வீதிகளில் சுவாமி வீதி உலா நடைபெறும். டிச., 31 காலை 6 முதல் மாலை 5 மணிவரை இருமுடி கட்டப்பட்டு சிறப்பு பஜனை மற்றும் அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு புத்தாண்டு சிறப்பு பூஜையுடன், சபரிமலை யாத்திரை புறப்பாடு நடைபெறும், என்றார்.