கிறிஸ்துமஸ் கீத ஆராதனை
ADDED :4356 days ago
காரைக்குடி: கிறிஸ்துமஸ் கீத ஆராதனை, கோட்டையூர் சி.எஸ்.ஐ., தெய்வீக மகிமையின் ஆலயத்தில் தொடங்கியது. பாஸ்டர் ஜெயபால் தலைமை வகித்தார். செயலாளர் சந்திரன் வரவேற்றார். காரைக்குடி சகாய மாதா ஆலய அருட்பணியாளர் வின்சென்ட் அமல்ராஜ் பேசினார். டி.இ.எல்.சி., சபை குரு சேகர், செஞ்சை புனித தெரசாள் ஆலய அருட்பணியாளர் அந்தோணிசாமி, அரியக்குடி வளன் நகர் அருட்பணியாளர் அம்புரோஸ், ஆவுடைபொய்கை அருட்பணியாளர் அருள்ஜோசப், காரைக்குடி பர்மா காலனி சி.எஸ்.ஐ., சர்ச் பாஸ்டர் ஜெஸ்லர்ராய் பங்கேற்றனர். ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.