உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி சித்ரகுப்தர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்!

காஞ்சி சித்ரகுப்தர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்!

காஞ்சிபுரம்: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, சித்ரகுப்தர் சுவாமி கோவிலில் வீதியுலா நடைபெற்றது. காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே நெல்லுகாரத்தெருவில், கரணி அம்பாள் சமேத சித்ரகுப்தர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இதில், திருவாதிரை நட்சத்திரம் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, காலை 9:00 மணிக்கு, உற்சவர் கரணிஅம்பாள் மற்றும் சித்ரகுப்தர் சுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் தம்பதி சமேதராய், அருள்பாலித்தனர். மேலும், முக்கிய வீதிகளில் வீதியுலா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !