உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காசி விஸ்வநாதர் கோவிலில் திருக்கல்யான உற்சவம்: பக்தர்கள் பரவசம்

காசி விஸ்வநாதர் கோவிலில் திருக்கல்யான உற்சவம்: பக்தர்கள் பரவசம்

ஊட்டி: ஊட்டி காந்தள் பகுதியில் உள்ள விசாலாட்சியம்பாள் உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஊட்டி காந்தள் விசாலாட்சிம்பாள் உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா இன்று காலை நடக்கிறது. விழாவையொட்டி முன்னதாக நேற்று விசாலாட்சியம்பாள், காசி விஸ்வநாதர் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகா தீபாராதனை ஆகியவை நடந்தது. மாலையில், விசாலாட்சியம்பாள் உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலை சுற்றி ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவையொட்டி ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்றனர். * ஊட்டி பவானீஸ்வரர் கோவிலில் இன்று நடக்கும் ஆருத்ரா தரிசன விழாவில், தோடர் இன மக்கள், ஆடல் பாடல்களுடன் தேர் ஊர்வலத்தை நடத்த உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !