ஐயப்பசுவாமி கோவிலில் மண்டல பூஜை
ADDED :4350 days ago
ஆனைமலை: ஆனைமலை ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜையும், அன்னதானமும் நடந்தது. மார்கழி முதல் நாளில், ஆனைமலை சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் சார்பில், மண்டல பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது. அதில் 2,000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். பின் மாலை 6:00 மணிக்கு ஐயப்ப சுவாமி திருவீதி உலா நடந்தது. இதில் ஐயப்பன் திருவுருவச்சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பெற்றது. இதில் பல இடங்களில் சுவாமிக்கு பொதுமக்கள் சிறப்பு பூஜைகள் நடத்தினர். மண்டல பூஜையை யொட்டி ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்நிகழ்ச்சிக்கு சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் கவுரவத்தலைவர் அனந்த கிருஷ்ணன் தலைமை தாங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தினர் செய்திருந்தனர்.