சமாராதனை எனும் சொல்லிற்கு விளக்கம்?
ADDED :4356 days ago
அற நெறியில் நிற்பவர்கள் வேதம், பயின்றவர்கள், நமக்கு நல்லறம் போதித்தவர்கள். இவர்களையெல்லாம் தெய்வமாக எண்ணி பூஜிக்க வேண்டும். ஆராதனை என்றால் பூஜை. ஸம்+ ஆராதனை= ஸமாராதனை. ஸம் என்றால் சிறந்த முறையில் என்று பொருள். முன்கூறிய பெரியவர்கள் நம் வீட்டிற்கு வரும் போதோ அல்லது நாம் அவர்களை அழைத்தோ சமாராதனை செய்ய வேண்டும். அவர்களின் பாதங்களைக் கழுவி சந்தனம், குங்குமம் இட்டு மலர்களினால் திருவடிகளில் அர்ச்சனை செய்து சிறந்த முறையில் உணவு அளிப்பதே சமாராதனையாகும். இதனை அடியவர்களுக்கு அன்னம் பாலித்தல், மாகேஸ்வர பூஜை என்றெல்லாம் கூட அழைப்பார்கள். திருநீலநக்கர், சிறுத்தொண்டர் போன்ற நாயன்மார்கள் அடியவர்களுக்கு
அன்னம் பாலிப்பதையே தமது ஆயுட்பணியாகக் கொண்டிருந்தார்கள்.