காரைக்குடியில் டிச.29ல் பெரியவர் ஆராதனை விழா
ADDED :4341 days ago
காரைக்குடி: காஞ்சிப்பெரியவர் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 20வது ஆராதனை விழா, காரைக்குடி சங்கர மடத்தில் டிச.29ல் நடக்கிறது. நடமாடும் தெய்வமாக விளங்கிய இவர், காஞ்சிகாமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியாக 87ஆண்டுகள் அருளாட்சி செய்தவர். விழாவை ஒட்டி, டிச.28 இரவு 7.00 மணிக்கு செக்காலை சந்தான கணபதி, சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், அர்ச்சனை நடக்கிறது. டிச.29 காலை 8.00 மணிக்கு ருத்ர ஜபம், 11.00மணிக்கு சுவாமிகளின் திருவுருவ படத்திற்கு பூஜை, மதியம் 12.00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. இரவு 7.00 மணிக்கு சங்கர அய்யர், கோபாலகிருஷ்ண பாகவதர், சிவகுமார், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் திவ்யநாம பஜனை இடம்பெறும். இந்த தகவலை மடத்தின் மேலாளர் விஸ்வநாதய்யர் தெரிவித்தார்.