உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அர்த்தநாரீஸ்வரர் கோயிலில்ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜை

அர்த்தநாரீஸ்வரர் கோயிலில்ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜை

தியாகதுருகம்:ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. ரிஷிவந்தியத்தில் 1,000 ஆண்டுகள் பழமையான அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேனபிஷேகம் நடந்தது. நடராஜர் சுவாமி, சிவகாம சுந்தரி அம்மனுக்கு அலங்கார அர்ச்சனைகள் நடந்தன. உற்சவர் நடராஜர் சிலை அலங்கரித்து வீதியுலா நடந்தது. மகா தீபாராதனையில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர். விழா ஏற்பாடுகளை மண்டகப்பாடி வெள் ளால செட்டியார் சமூகத்தினர் செய்திருந்தனர். நாகராஜ், சோமு குருக்கள் பூஜைகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !