உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பக்கரையில் குவியும் ஐயப்ப பக்தர்கள்

கும்பக்கரையில் குவியும் ஐயப்ப பக்தர்கள்

பெரியகுளம்: கும்பக்கரை அருவியில், தண்ணீர் கொட்டுவதால், சபரிமலை ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். கொடைக்கானல் வனப்பகுதியில் பெய்த மழையால், நீரோட்டம் சீராக உள்ளதால், கும்பக்கரை அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. தற்போது, பனிக்காலமான "ஆப்-சீசனில் உள்ளூர் மற்றும் தேனி பகுதியிலிருந்து, கும்பக்கரை அருவிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைவு.அதே நேரத்தில், சபரிமலைக்கு சென்று விட்டு ஊருக்கும் திரும்பும் ஐயப்ப பக்தர்கள், அருவிக்கு குளிப்பதற்கு அதிகளவில் வருகின்றனர். தற்போது, ஆபத்தான யானை கஜம், குதிரை கஜம் மூடப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, திண்டுக்கல் பகுதியிலிருந்து, சபரிமலைக்கு சென்று விட்டு திரும்பும் ஐயப்ப பக்தர்கள் கும்பக்கரை அருவிக்கு அதிகளவில் வந்து நீராடி செல்கின்றனர். இங்கு வனபாதுகாப்பு பணிக்கு, வனத்துறையினர் வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !