திருமலை திருப்பதி செல்ல விருப்பமா?
திருப்பூர்: வசதியில்லாத முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், திருப்பதி மற்றும் திருச்சானூர் இலவசமாக செல்ல விருப்பப்பட்டால், ஸ்ரீவாரி டிரஸ்டில் விண்ணப்பிக்கலாம். முதியோர், மாற்றுத்திறனாளிகள் 160 பேரை, ஸ்ரீவாரி டிரஸ்ட் திருமலை திருப்பதிக்கு இலவசமாக அழைத்துச் சென்றது. அவர்கள், தரிசனம் முடித்துவிட்டு, திருப்பூர் திரும்பியுள்ளனர். வசதியில்லாத முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை மூன்று மாதத்துக்கு ஒரு முறை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்து வரும் மாதங்களில் செல்ல விரும்புபவர்கள், தங்களுடைய கலர் புகைப்படம் மற்றும் அடையாள அட்டை நகல் ஒன்றை அலுவலகத்தில் வழங்க வேண்டும். ரயிலில் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி, ஆறு வேளை உணவு வழங்கப் படும். ரூ.50 சுதர்சன டிக்கெட் இரண்டுக்கு, தலா நான்கு லட்டு வழங்கப்படும். மேலும் விவரங் களுக்கு, 0421 - 2424 401 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம், என, ஸ்ரீவாரி டிரஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.