ஆகர்ண தனுராசனம்
ADDED :5340 days ago
காலை 6 மணிக்குள் அல்லது மாலை 6 மணிக்கு மேல் இந்த ஆசனம் செய்ய வேண்டும். வெறும் வயிற்றிலோ அல்லது சாப்பிட்ட 3 மணி நேரத்திற்கு மேல் செய்யலாம்.
செய்முறை : அமர்ந்த நிலையில் கை கால்கள் இணைந்த செயல் ஆசனம். இயல்பான மூச்சுடன் நமது முழு சிந்தனையும் காதை நோக்கி இருக்க வேண்டும். இடது கால் நீட்டப்பட்டு, வலது காலை மடித்து, வலது பாத கட்டை விரலை வலது கையால் பிடித்து பாதத்தை வலது காதருகே கொண்டு செல்ல வேண்டும். இப்படி வலம் இடம் மாற்று முறையில், கை மற்றும் கால்களை எதிர்புறம் மாற்றி செய்யப்படுவதாகும்.
பலன் : செவிப்பறை, காது குருத்தெலும்பு சம்பந்தப்பட்ட நோய், காது அடைப்பு, காதில் இரைச்சல், கேட்கும் திறன் குறைவு, காதில் சீழ் வடிதல் ஆகிய காது சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும். காது கேட்கும் சக்தி அதிகரிக்கும்.