உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீரடி சாயிபாபா கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜைகள்

சீரடி சாயிபாபா கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜைகள்

புதுச்சேரி: பிள்ளைச்சாவடி சீரடி சாயிபாபா கோவிலில், புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பிள்ளைச்சாவடி சீரடி சாயி நகரில் சாயிபாபா கோவில் அமைந்துள்ளது. சீரடி சாயிபாபா சேவா சேரிடபிள் டிரஸ்ட் மற்றும் சீரடி சாயிபாபா சேவா சமிதியும் இணைந்து, நேற்று புத்தாண்டு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. விழாவையொட்டி, காலை 8:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், கடலூர் நந்தகுமாரின் சாயி பஜன்ஸ் நடந்தது. பகல் 11:45 மணிக்கு பாபா பல்லக்கு உற்சவம், 12:00 மணிக்கு ஆரத்தி நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஆரத்தி செய்து, பிரசாதம் வழங்கப்பட்டது. 6:30 மணிக்கு அருணகிரிநாதர், முருகேச கந்தசாமி, சீனுதுளசிராமன் ஆகியோரின் சாயி பஜன்ஸ், இரவு 8:00 மணிக்கு ஆரத்தி நடந்தது. ஏற்பாடுகளை சீரடி சாயிபாபா சேவா சமிதி நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !