நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
ADDED :4341 days ago
திருநெல்வேலி: நெல்லையில் உள்ள கெட்வெல் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தியை ஒட்டிசிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் அருகே கெட்வெல் தனியார் ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு அனுமன் ஜெயந்தியை யொட்டி நேற்று சிறப்பு அபிசேகம், அலங்காரம், வழிபாடுகள் நடத்தப்பட்டன. மேலும் ஜனவரி முதல் தேதியன்று அனுமன் ஜெயந்தி,கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு நிகழ்ந்துள்ளது. ஆங்கில புத்தாண்டின் துவக்கத்தில் நடந்துள்ள அனுமன் ஜெயந்தியையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வழிபாடு மேற்கொண்டனர். மேலும் இதே கோயிலில் உள்ள கனகமகா லட்சுமிக்கும் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.