தைப்பூசம் முருகனை வணங்குவதற்கு ஏற்றநாளாக ஏன் கருதப்படுகிறது?
ADDED :4400 days ago
நடராஜர், சிவகாமி இருவரும் நடனமாடும் நாள் தைப்பூசம். சிவ வழிபாட்டுக்குரிய இந்த நாள், முருகனுக்குரியதாகவும் ஆகி விட்டது. பொதுவாக தைப்பூசத்தன்று பவுர்ணமியும் இணைந்து வரும். பவுர்ணமி திதி எல்லா தெய்வ வழிபாட்டிற்கும் உகந்தது என்பதால், சிவன், அம்மன், முருகன் வழிபாடு தைப்பூசத்தன்று நடக்கிறது.