சனியின் பாதிப்பிலிருந்து விடுபட என்ன பரிகாரம்?
ADDED :4336 days ago
சனி என்ற சொல்லுக்கு குளிர்ச்சி என்று தான் பொருள். இன்றைய விஞ்ஞானிகள் கூட, சனி கிரகத்தை ஆராய்ந்து அது பனிமயமாக இருப்பதாக ஒப்புக் கொள்கிறார்கள். நல்லதைச் செய்ய வேண்டிய காலங்களில் வாரி வழங்குவதில் வள்ளல். கெடுதலைச் செய்ய வேண்டிய சூழலில், சற்று பாதிப்பையும் தரும் குணம் படைத்தவர். எல்லாரும் பயப்படும் அளவிற்கு கெட்டவர் கிடையாது. இவரது பாதிப்பிலிருந்து விடுபட, பிரதோஷ விரதம் இருப்பது மிகவும் உயர்ந்தது. மேலும், அன்றைய தினம் காளை மாட்டிற்கு அரிசி, வெல்லம், எள் கலந்து கொடுப்பது சிறந்த பரிகாரம்.