உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ராப்பத்து உற்சவம்!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ராப்பத்து உற்சவம்!

திருவல்லிக்கேணி: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், வரும் 11ம் தேதி, அதிகாலை, 4:30 மணிக்கு, பரமபத வாசல் திறக்கப்படுகிறது. அன்றில் இருந்து, 10 நாட்கள், ராப்பத்து உற்வசம் நடக்கிறது. திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவிலில், வரும், 11ம் தேதி, பரமபத வாசல் திறக்கப்படுகிறது. அன்று, பக்தர்கள் உள் வளாகத்துக்கு வரவும், மூலவர் சன்னிதியில் தரிசனம் செய்து விட்டு, வெளியில் செல்லவும், மற்றும் இன்ன பிற விவரங்கள் அறிய, தகவல் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியை, பக்தர்கள் பார்க்கும் வண்ணம், கோவிலின் கிழக்கு, மேற்கு பகுதிகளில், பெரிய திரைகளில் ஒளிபரப்பப்படுகிறது. 11ம் தேதியில் இருந்து, 10 நாட்களுக்கு, ராப்பத்து உற்சவம் நடைபெறும். பரமபதவாசல் திறக்கப்படும் போது, தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள், இன்று முதல் விற்பனை செய்யப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !