உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தமிழகத்தின் முக்கிய சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் தைப்பூச திருவிழா முக்கியமானதாகும். இந்த ஆண்டு தைப்பூச விழா காலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. கோயில் நந்தி முன்பாக உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கொடியேற்றம்  நடந்தது. தைப்பூச விழா 10 நாட்களுக்கும் மேலாக நடக்கிறது. திருநெல்வேலி என்ற ஊரின் பெயர்க்காரணம் ஏற்பட காரணமாக இருந்த நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா வரும் 11ம் தேதி நடக்கிறது. 17ம்தேதி தைப்பூச தீர்த்தவாரி நடக்கிறது. தொடர்ந்து 18ம் தேதி சவுந்தர சபையில் நடனமும், 19ம் தேதி நெல்லையப்பர் கோயில் வெளித்தெப்பத்தில், தெப்ப உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் யக்ஞ நாராயணணன் செய்துள்ளார். தொடர்ந்து 20ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலும் லட்ச தீப விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !