திட்டக்குடி சுகாசன பெருமாள் கோவிலில் தைப்பூச பிரம்மோற்சவ விழா!
ADDED :4329 days ago
திட்டக்குடி: திட்டக்குடி சுகாசன பெருமாள் கோவிலில் தைப்பூச பிரம்மோற்சவ விழா நாளை (09.01.2014) துவங்குகிறது. திட்டக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீவேதாந்த வல்லி சமேத சுகாசன பெருமாள் கோவிலில் தைப்பூச பிரம்மோற்சவ விழா நாளை துவங்குகிறது. தொடர்ந்து வரும் 15ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும், 17ம் தேதி தைப்பூச திருத்தேர் விழாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் (பொறுப்பு) முருகன், ஆய்வாளர் சிவஞானம் மற்றும் சுகாசன பெருமாள் சேவா சங்கத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.