திருவாரூர் கோவிலுக்குரிய இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!
திருவாரூர்: திருவாரூர் அருகே அம்மையப்பன் பகுதியில் வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இரண்டே கால் ஏக்கர் கோவில் இடத்தை அப்பகுதி யினர் சிலர் ஆக்கரமிப்பு செய்ததை, துறை அதிகாரிகள் அகற்றினர். திருவாரூரில் இருந்து தஞ்சை சாலையில் 12 கி.மீ., தொலைவில் அம்மை யப்பன் பகுதி உள்ளது. இங்கு ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வெங்க டேச பெருமாள்கோவில் உள்ளது. இக்கோவில் அருகே சர்வே 202/17ல் 0.73.00 ஏர்ஸ் மற்றும் 202/18 ல் 0.16.00 ஏர்ஸ் என மொத்தத்தில் 0.89 ஏர்ஸ் என இரண்டேகால் ஏக்கரில் புஞ்சை நிலம் இருந்தது. அந்த இடத்தில் அப்பகுதியினர் சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டியும் வேலி அடைத்து தோட்டம் அமைத்தனர். இவற்றை காலி செய்யக்கோரி இந்து சமய அறநிலைத்துறையினர் உத்தர விட் டும் காலிசெய்யாமல் ஆக்கி ரமிப்பு மேலும் நீட்டித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் இந்து சமய அறநிலைத்துறை செயலர் அலு வலர் முருகன், ஆய்வாளர் உமாராணி, கிராம நிர்வாக அலுவலர் அசோகன் மூலம் சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.