உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எருமேலியில் இன்று பேட்டை துள்ளல்!

எருமேலியில் இன்று பேட்டை துள்ளல்!

சபரிமலை: எருமேயில் இன்று நடைபெறும் பேட்டை துள்ளலுக்கு முன்னோடியாக நேற்று மாலை முஸ்லீம்கள் பங்கேற்ற சந்தனக்குட பவனி நடைபெற்றது. சபரிமலையில் மண்டல சீசன் தொடங்கிய நாள் முதல் பேட்டை துள்ளல் நடைபெற்றாலும், மகரவிளக்குக்கு இரண்டு நாட்கள் முன்னதாக நடைபெறும் அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் பிரசித்தி பெற்றதாகும். இந்த பேட்டை துள்ளலுக்கு முந்தைய நாள் மத ஒற்றுமையை நிலைநிறுத்தும் வகையில் முஸ்லீம்கள் பங்கேற்கும் சந்தனக்குட பவனி நடைபெறுகிறது. நேற்று பகல் இரண்டு மணிக்கு எருமேலி பள்ளிவாசல் முன் ஐந்து யானைகள் அணிவகுத்து நின்றது. மேளதாளம் முழங்க இந்த யானைகள் எருமேலியின் ஐந்து பகுதிகளுக்கு சென்றது. இங்கு மக்களிடம் இருந்து காணிக்கை பெற்று இந்த பவனி பள்ளி வாசலை அடைந்தது. தொடர்ந்து சந்தனக்குட பவனி தொடங்கியது. இதனை அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இந்த பவனி அதிகாலை மூன்று மணி வரை நடைபெற்றது. இதில் ஜமா அத் நிர்வாகிகள் அப்துல்சலாம், இர்ஷாத், நிசார் மற்றும் உறுப்பினர்களும் , ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர். பேட்டை துள்ளல்: இன்று பகல் 12.30 மணிக்கு குருசாமி சந்திரசேகரன்நாயர் தலைமையில் அம்பலப்புழா பக்தர்களின் பேட்டைதுள்ளல் நடைபெறுகிறது. மாலை மூன்று மணிக்கு ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !