கும்பகோணத்தில் ஐயப்பசுவாமிக்கு நாளை ஜோதி தரிசன விழா
ADDED :4323 days ago
கும்பகோணம் ஸ்ரீநகர்காலனி ஸ்ரீவலம்புரி விநாயகர் கோயிலில் தனி சன்னதி கொண்டுள்ள ஸ்ரீஐயப்ப சுவாமி கோயிலில் நடைபெறவுள்ள விழாவையொட்டி, அன்று காலை கணபதிஹோமம், சாஸ்தா ஹோமத்துடன் விழா தொடங்கி, ஐயப்பனுக்கு 18 வகை திரவியங்களால் மகா அபிஷேகம், தீபாரதனை நடைபெறும்.மாலையில் திருவாபரண பெட்டிக்கு பொன்னாடை அணிவித்தல், ஐயப்பசுவாமிக்கு திருவாபரணம் அணிவித்து ராஜ அலங்காரம் செய்வித்தலும் நடைபெறுகிறது. தொடர்ந்து ஜோதி வழிபாடு மற்றும் மகாதீபாரதனை நடைபெறுகிறது.