ஆஞ்சநேயரின் குரு!
ADDED :4324 days ago
அஞ்சனாதேவி, தன் மகனானஆஞ்சநேயரை தொட்டிலில் படுக்க வைத்திருந்தாள். அப்போது, வானில் சூரியன் உதயமானது. அதை சிவந்த பழம் எனக் கருதிய ஆஞ்சநேயர், வானில் இருந்த சூரியன் மீது பாய்ந்து விட்டார். இதைக் கண்ட இந்திரன், தன்வஜ்ராயுதத்தைஆஞ்சநேயர் மீது
வீசினான். அவரின் தாடை மீது பட்டதால், அலறிய ஆஞ்சநேயர் கீழே விழுந்தார். மூர்ச்சையான ஆஞ்சநேயரைக் கண்டு அஞ்சனை துடித்தாள். அப்போது அங்கு வந்த சூரியன், அவளுக்கு ஆறுதல் சொன்னதோடு, தானே குருவாக இருந்து, சகல வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார்.