உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றத்து பழனி ஆண்டவருக்கு 100 லிட்டர் பாலாபிஷேகம்!

குன்றத்து பழனி ஆண்டவருக்கு 100 லிட்டர் பாலாபிஷேகம்!

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயலின் உப கோயிலான, மலை அடிவாரத்திலுள்ள பழனி ஆண்டவர் கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மூலவர் பழனி ஆண்டவருக்கு 100 லிட்டர் பாலாபிஷேகம் உட்பட பல்வகையாக அபிஷேகங்கள் முடிந்து சுவாமி ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். மலைக்குப்போகும் பாதையில், மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பழனி ஆண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் தைப்பூசத்தன்று விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் நேற்று காலை, சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து பூஜை, அபிஷேகப் பொருட்களை சிவாச்சார்யார்கள், பழனி ஆண்டவர் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். அங்கு  எழுந்தருளியுள்ள தண்டாயுதபாணி சுவாமிக்கு  பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் பொடி, விபூதி உட்பட பல்வகை திரவிய அபிஷேகங்கள் முடிந்து, மூலவர் தண்டாயுதபாணி, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்õர். இரவு 7 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள உற்சவர்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, முத்துகுமார சுவாமி, தெய்வானை தனித்தனியாக புறப்பாடாகி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தனர். இரண்டு   உற்சவர்கள் ஒரே நாளில் புறப்பாடாவது ஆண்டிற்கு ஒருமுறை, தைப்பூசத்தன்று மட்டுமே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !