உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பார்வேட்டை உற்சவம்: பக்தர்கள் பரவசம்

பார்வேட்டை உற்சவம்: பக்தர்கள் பரவசம்

காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரம் மாவட்ட கோவில்களில், பார்வேட்டை உற்சவம் நடைபெற்றது.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பார்வேட்டை உற்சவம் நேற்று காலை 8:00 மணிக்கு, துவங்கியது. இதில், ஏகாம்பரநாதர் மற்றும் ஏலவார்குழலி மற்றும் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரநாதர் சுவாமி, பல்வேறு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாகச் சென்று, பகல் 12:00 மணிக்கு, திம்மசமுத்திரம் கிராமத்தில் உள்ள திரிபுராந்தகேஸ்வரர் கோவிலில் எழுந்தருளினார். 27 வகையான பழங்கள், வாத்தியங்கள் போன்றவற்றால், சுவாமியை பக்தர்கள் வழிபட்டனர். பின், பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இதேபோல், காஞ்சி வரதராஜ பெருமாள் பார்வேட்டை உற்சவமாக பழையசீவரம் பகுதியில் உள்ள, நரசிம்ம பெருமாள் கோவிலில் ழுந்தருளினார். மேலும், மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலிலும், பார்வேட்டை உற்சவம்நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !