உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் கோவில்களில் தைப்பூச திருவிழா கோலாகலம்!

காஞ்சிபுரம் கோவில்களில் தைப்பூச திருவிழா கோலாகலம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தைப்பூச விழாவையொட்டி பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள வல்லக்கோட்டையில், வள்ளி தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில், ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம்.அதன்படி, நேற்று தைப்பூசத்தையொட்டி, கோவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது.சுப்ரமணிய உற்சவர், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவர் ஞானகிரி மலையில், மாலை, 3:00 மணிக்கு எழுந்தருளினார். அங்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான, பக்தர்கள் கலந்து கொண்டு, முருகப்பெருமானை வழிப்பட்டனர். சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நடைபயணமாக, வல்லக்கோட்டை கோவிலுக்கு வந்தனர்.அறுபத்து மூவர் உற்சவம்உத்திரமேரூர் அடுத்துள்ள, பெருநகர் கிராமத்தில் பிரமீசப்பெருமான் கோவிலில் பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 6ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. 63 நாயன்மார்களின் மகா உற்சவ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.நேற்று காலை 10:00 மணிக்கு, அறுபத்து மூன்று நாயன்மார்களும், சிறப்பு அலங்காரத்தில் தனித்தனி பல்லக்கில் திருவீதி உலா வந்தனர். ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, நடுத்தெரு, மேல்தெரு, சன்னிதி தெரு, கடைத்தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வழியே, வீதியுலா வந்த நாயன்மார்களை, பக்தர்கள் தீபங்கள் ஏற்றி வழிபட்டனர். மதியம் 2:00 மணிக்கு அறுபத்து மூன்று நாயன்மார்களும் கோவிலை அடைந்தனர். 108 பால்குட விழாதிருக்கழுக்குன்றத்தில் உள்ள ருத்திரான்கோவிலில், பழமை வாய்ந்த காளிக்கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று காலை, 11:00 மணிக்கு சங்கு தீர்த்த குளத்திலிருந்து செவ்வாடை அணிந்து, 108 பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள், அம்மனுக்கு பாலபிஷேகம் செய்தனர். விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, அம்மனை வழிபட்டனர்.குரு புஷ்யம் உற்சவம்ஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில் ராமானுஜர் உற்சவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட தினத்தை கொண்டாடும் வகையில், குருபுஷ்யம் உற்சவம் நேற்று முன்தினம், துவங்கியது. ராமானுஜர் உற்சவர் கோவில் வளாகத்தில் இருந்து காலை 7:00 மணிக்கு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், எழுந்தருளி, வீதி உலா வந்தார். பிற்பகல் 1:00 மணிக்கு, ராமானு ஜருக்கு, திருமஞ்சனமும், சிறப்பு ஆராதனையும் நடந்தது. மாலை 7:00 மணிக்கு கேடய வாகனத்தில், எழுந்தருளி வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9:00 மணிக்கு, ஏகாந்த சேவை நிகழ்ச்சியும் நடந்தது.

தெப்பல்: திருவிழாதிருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சங்கு தீர்த்தக் குளத்தில், 3 ஆண்டுகளுக்கு பின், நேற்று தெப்பல் உற்சவம் துவங்கியது. நேற்று இரவு, 7:30 மணியளவில், சங்கு தீர்த்த குளத்தில் சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.திருமுறை இசை, நாதாஸ்வர இசை முழங்க, குளத்தில் மூன்று முறை தெப்பத்தில் சுவாமி உலா வந்தார். இன்று, தாழக்கோவில் பக்தவச்சலேஸ்வரர் கோவிலில் உள்ள ரிஷப தீர்த்த கோவிலில், மாலை, 6:30 மணிக்கு, தெப்ப திருவிழா நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !