உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகன் கோவில்களில் தைப்பூச தேர்திருவிழா

முருகன் கோவில்களில் தைப்பூச தேர்திருவிழா

ராசிபுரம்: திருச்செங்கோடு அடுத்த காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், இன்று (17ம் தேதி), காலை, 5 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது. காலை, 6 மணிக்கு, சொர்க்க வாசல் திறப்பு, இரவு, 7 மணிக்கு, ஸ்வாமி திருத்தேர் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.* மோகனூர் அடுத்த கந்தமலை பாலதண்டபானி கோவிலில், இன்று (17ம் தேதி) காலை, 8 மணிக்கு ஸ்வாமி திருத்தேர் ஏற்றம், மாலை, 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.* ராசிபுரம் அடுத்த கூனவேலம்பட்டிபுதூர் பாலசுப்ரமணியர் கோவிலில், நேற்று, தைப்பூச தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. அதையடுத்து, இன்று (ஜன.,17) அதிகாலை, 5 மணிக்கு, பாலசுப்ரமணியர் ஸ்வாமிக்கும், வள்ளி, தெய்வானை ஸ்வாமிக்கும் திருக் கல்யாணம் நடக்கிறது. அதை தொடர்ந்து, துர்க்கை வழிபாடு மற்றும் அகல் விளக்கு பூஜை நடக்கிறது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில், ஸ்வாமி திருவீதி உலா வருகிறார். நாளை (18ம் தேதி) சத்தாபரணம், 19ம் தேதி மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !