உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்தசாமி கோவிலில் தேர்த்திருவிழா கோலாகலம்

கந்தசாமி கோவிலில் தேர்த்திருவிழா கோலாகலம்

ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி அருகே உள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், இன்று தேர்த்திருவிழா விமரிசையாக நடக்கிறது.சேலம், நாமக்கல் எல்லையில், பிரசித்தி பெற்ற கோவிலாக காளிப்பட்டி கந்தசாமி கோவில் உள்ளது. இங்கு, ஒவ்வொரு ஆண்டும், தைப்பூச தேர்த்திருவிழா, வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டு தைப்பூச தேர்த்திருவிழா, கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் முருகனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வந்தது.இன்று காலை, 6 மணியளவில், சொர்க்கவால் திறக்கப்பட்டு, அதன் பின் முருகனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்படுகிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இன்று மாலை, 3 மணியளவில், இந்து சமய அறநிலையத்துறையின் சேலம் இணை ஆணையர் மங்கையர்க்கரசி, நாமக்கல் இணை ஆணையாளர் கிருஷ்ணன், கோவில் பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் கோவில் பூசாரி செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு, தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.முதலில், விநாயகர் தேரும், அதனை தொடர்ந்து கந்தசாமி முருகன் தேரும் வடம் பிடிக்கப்படுகிறது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஆட்டையாம்பட்டி பைக் மெக்கானிக் சங்கம் சார்பில், கோவில் அருகில், இலவச வாகன பழுது பார்க்கப்படுகிறது.தேர்த்திருவிழா காலங்களில், கோவில் அருகில் பிரம்மாண்ட முறையில் மாட்டு சந்தை கூடுகிறது. அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் பரம்பரை அறங்காவலர்கள், கோவில் பூசாரி மற்றும் செயல் அலுவலர் சீனிவாசன் ஆகியோர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !