உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமாரசாமிபேட்டை கோவிலில் பக்தர்கள் பால் குட ஊர்வலம்

குமாரசாமிபேட்டை கோவிலில் பக்தர்கள் பால் குட ஊர்வலம்

தர்மபுரி: தர்மபுரி குமாரசாமிபேட்டையில், 144 தடை உத்தரவுக்கு பின் நடந்த பால்குட ஊர்வலத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். கோவில் விழா கலை நிகழ்ச்சிகளுக்கு போலீஸார் தடை விதித்ததால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் தை தேரோட்டம் பல ஆண்டுகளாக, பக்தர்களால் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவை முன்னிட்டு, விழாக்குழுவினர் சார்பாக, ஆடல், பாடல், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். கடந்தாண்டு மாவட்டத்தில் விதிக்கப்பட்டிருந்த, 144 தடை உத்தரவால், குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், தை தேரோட்ட விழாவில், எந்த ஒரு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவில்லை. மாவட்டத்தில் ஓராண்டு காலம் நீடித்த, 144 தடை உத்தரவு சில மாதத்துக்கு முன் விலக்கிக் கொள்ளப்பட்டதால், இந்தாண்டு மாவட்டம் முழுவதும், பொங்கல் விழா, கோவில் திருவிழாக்களை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில் பக்தர்கள் இந்தாண்டு, தைப்பூச தேரோட்டத்தை முன்னிட்டு, பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இவ்விழாவை முன்னிட்டு, நேற்று காலை, எஸ்.வி.,ரோடு சாலை விநாயகர் கோவிலில் இருந்து, பென்னாகரம் வழியாக, குமாரசாமிப்பேட்டை கோவிலுக்கு, பால்குட ஊர்வலம் வந்தடைந்தது. இதனைதொடர்ந்து, ஸ்வாமிக்கு பால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் ஆகியவை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !