உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடம்பன் துறையில் 8 ஸ்வாமிகள் சந்திப்பு

கடம்பன் துறையில் 8 ஸ்வாமிகள் சந்திப்பு

குளித்தலை: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, கடம்பன் துறை உள் காவிரியில், எட்டு ஸ்வாமிகள் சந்திப்பு நடந்தது. கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பன்துறை காவிரியில் தைப்பூச திருவிழா, நடந்தது. இதையொட்டி கடம்பர்கோவில் கடம்பனேஸ்வரர், ராஜேந்திரம் மத்யாகணேஸ்வரர், அய்யர்மலை ரத்தினகிரிஸ்வரர், திருஈங்கோய்மலை மரகதனேஸ்வரர், கருப்பத்தூர் சிம்மபுரிஸ்வரர், பெட்டவாய்த்தலை மத்தியார்ஜீனேஸ்வரர் உட்பட எட்டு கோவில்களில் இருந்து வரும் ஸ்வாமிகள் சந்திப்பு மாலை, 4 மணி முதல் துவங்கியது. இதில், ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்து. இதைத்தொடர்ந்து மாலை, 5 மணிக்கு மணி தீர்த்தவாரி நடந்தது. இங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். டி.எஸ்.பி.,க்கள், அமீன், கலையரசன் ஆகியோர் தலைமையில், 300க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், செயல் அலுவலர் யுவராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !