திருப்பரங்குன்றம் தைப்பூச விழா: முருகபெருமான் உலா!
ADDED :4318 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை அடிவரத்தில் உள்ள பழனியாண்டவர் கோவிலில் தைப்பூச விழா விமரிசையாக நடைபெற்றது. அங்கு பழனியாண்டவருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம், தீப ஆராதனை நடைபெற்றது. இதனையடுத்து மேளதாளங்கள் முழங்க சுவாமி புறப்பட்டு நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.