திருமலைக்குமார சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம்!
ADDED :4318 days ago
பண்பொழி: திருமலைக்குமார சுவாமி கோவிலில் நேற்று தைப்பூச தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தைப்பூச திருவிழா கடந்த 8ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மதியம் ஒரு மணி அளவில் நிலையை அடைந்தது.விழாவில் கோவில் மண்டகப்படிதாரர்கள் மற்றும் கடையநல்லூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.