சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் தெப்ப உற்சவம்!
ADDED :4315 days ago
நாகப்பட்டினம்: சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில், தைப் பூசத் தெப்ப உற்சவ விழாவில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நாகை அடுத்த சிக்கலில், சிங்கார வேலவர் கோவில் உள்ளது. திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், கச்சியப்பர், சிதம்பரமுனிவர் ஆகியோர்களால் பாடல் பெற்ற, இக்கோவிலில் தைப்பூசத் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சிங்காரவேலவர் தேவியர்களுடன் தெப்பத்தில் எழுந்தருளிய பின் தெப்ப உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.