சபரிமலையில் 20ம் தேதி நடை அடைப்பு!
ADDED :4315 days ago
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 20ம் தேதி நடை அடைக்கப்படுகிறது. சபரிமலையில் 14ம்தேதி நடைபெற்ற மகரவிளக்கு பூஜை, மகரஜோதி தரிசனத்தை தொடர்ந்து 18 ஆம் தேதி வரை படி பூஜை நடைபெறும். 18ஆம் தேதி வரை நெய் அபிஷேகமும் செய்யப்படுகிறது. 19 ஆம் தேதி பக்தர்கள், தரிசனம் செய்யலாம். 20 ஆம் தேதி பந்தள ராஜா மட்டும் ஐயப்பனை தரிசனம் செய்வார். அதன் பின் சபரிமலை நடை அடைக்கப்படுகிறது.