உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் கல்வெட்டுகள்!

கோவில் கல்வெட்டுகள்!

சென்னிமலை கல்வெட்டு குறித்து முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் யு.ஆர்.சி., கனக சபாபதி கூறியதாவது: கோவில் கர்ப்பக்கிரகத்தின் இடதுபுற நிலவு வாயிற் சுவர்த்தலத்தில் உள்ள கல்வெட்டு, "ஸ்வஸ்தி ஸ்ரீமகாமண்டலேஸ்வரன் கலியுகம் சகத்துக்கு மேல், செல்லா நின்ற விபசம் வத்சரத்து பங்குனி மாதம், சென்னிமலை வேலவருக்கும், வள்ளிக்கும் திருக்கோவில் காரியம் செய்ததை விளக்குகிறது. * நுழைவுவாயில் விதானத்தில் உள்ள கல்வெட்டு "சோபகிருது வருஷம் பங்குனி மாதம் 10ம் தேதி தேவராச உடையார் காரியத்துக்கு கர்த்தரான முத்து... ஐயவைர்கள் நாளில் பூந்துறை வேலத்தட்டான் மகன் பழனித்தட்டான் என்பவரின் சேவையை குறிக்கிறது. * மலை அடிவாரத்தில் உள்ள கோமாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து சாசனமும், பிடாரியூரில் உள்ள கொண்ட தப்புவராய கண்டான் என்றும் நரசிம்ம நாயக்கன் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் மிகவும் சிதைந்துள்ளன. பிடாரியூர் திருமுகமலர்ந்தார் கோயில் மண்டபத்தின் வெளிப்பக்கத்து நிலவு வாயில் இடதுபுறச் சுவர்த்தளத்தின் அடிக்கல்லில் ஒரு சாசனம் பாடலாகவே வெட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !