உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை முருகனை தரிசித்தால் நவக்கிரகங்களை தரிசித்த பலன்!

சென்னிமலை முருகனை தரிசித்தால் நவக்கிரகங்களை தரிசித்த பலன்!

சென்னிமலை: சுப்பிர மணிய ஸ்வாமி திருக் கோவில் செயல் அலுவலர் கே.பசவராஜன் கூறிய தாவது: பழங்காலத்தில் கொங்கு மண்டலம், 24 பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு பகுதி பூந்துறைநாடு. கொங்கு நாட்டில் பழம் பெருமை வாய்ந்த முருகன் கோவில் இது. வடமொழி பெயர் சிரகிரி. தேவராய சுவாமிகளும், இத்தலத்தை பாடிய அருணகிரி நாதரும், "சிவகிரி என்று குறிப்பிட்டுள்ளனர். காஞ்சிமா நதி என்னும் நொய்யல் ஆற்றை, தெற்கு பாகமாக கொண்டு சென்னிமலை கோவில் அமைந்துள்ளது. ஆண்டவர் சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது. முன்புறம் புளியடி விநாயகர் சன்னதியும், அடுத்து கோவிலில் உட்புறத்தில் மூலவர் சென்னிமலை ஆண்டவருக்கு வலப்பாகத்தில் மார்கண்டேஸ்வரர் மற்றும் உமையவல்லி அம்மன் சன்னதிகளும், இடது பாகத்தில் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி அம்மன் சன்னதிகளும் அமையப் பெற்றுள்ளன.

செவ்வாய் தலம்: கோவிலில் மூலவர் சென்னிமலை ஆண்டவர் நடுநாயக மூர்த்தியாக செவ்வாய் கிரகமாக அமைந்துள்ளார். மூலவரை சுற்றி நவகிரகங்களில் எட்டு கிரகங்களும், அழகிய தேவ கோஷங்களில் பாங்குடன் அமைந்து அருள்பாலிக்கின்றனர். மூலவரை வலம் வந்து வணங்கினாலே நவக்கிரகங்களையும் வணங்கி வழிபட்ட பலன் உண்டு. மூலவர் சன்னதிக்கு நேர் பின்புறம் படிக்கட்டுகள் வழியாக சென்றால், வள்ளி, தெய்வானை சன்னதி பெரும் கோவிலாக அமைந்துள்ளது. தேவியர் இருவரும் அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற பெயர்களுடன் சென்னிமலை ஆண்டவரை திருமணம் செய்ய தவம் செய்து, இறைவனை அடைந்து அங்கேயே தனிப்பெருங் கோவிலாக கொண்டு பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். இப்படி தேவியர் இருவரும் தனிப்பெருங் கோயிலில் அமைந்து காட்சியளிப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !