பக்தர்கள் காவடியுடன் பழனிக்கு பாதயாத்திரை!
ADDED :4312 days ago
எடப்பாடி: எடப்பாடி பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்டுள்ளனர். எடப்பாடி வட்டத்தில் பல்வேறு குழுக்களைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முருகப் பக்தர்கள் ஆண்டுதோறும் பழனி மலைக்கு ஆன்மிகப் பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு கடந்த இரு நாள்களுக்கு முன்பு இருந்து பக்தர்கள் காவடியுடன் நடைபயணம் புறப்பட்டு செல்லத் தொடங்கியுள்ளனர். எடப்பாடியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரைச் செல்லும் பக்தர்களுக்கு புதன்கிழமை (ஜனவரி 22) இரவில் பழனிமலையில் தங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.