சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டம்!
ADDED :4310 days ago
தர்மபுரி: பாப்பாரப்பட்டி சுப்பிரமணியசாமி கோவில்களில் தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 13ம்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஏராளமான பக்தரகள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.