சொர்ண கர்ஷண பைரவர் கோவிலில் சேஷாத்ரி சுவாமிகள் ஜெயந்தி விழா!
ADDED :4309 days ago
புதுச்சேரி: இடையார்பாளையம் நாணமேட்டில் உள்ள சொர்ண கர்ஷண பைரவர் கோவிலில், சேஷாத்திரி சுவாமிகள் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. புதுச்சேரி-கடலூர் சாலை இடையார்பாளையம் நாணமேடு கிராமத்தில் சொர்ண கர்ஷண பைரவர் கோவிலிலுள்ள சேஷா ஆசிரமத்தில், சேஷாத்திரி சுவாமிகளின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து 18 சித்தர்களுக்கு தனித்தனியாக யாக வேள்விகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, முத்து குருக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.